உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோலர் கிராஸ் பேரியர் தடுப்பு அமைப்பு மலைப்பாதை வளைவுகளில் பணி தீவிரம்

ரோலர் கிராஸ் பேரியர் தடுப்பு அமைப்பு மலைப்பாதை வளைவுகளில் பணி தீவிரம்

வால்பாறை, ; மலைப்பாதையில் விபத்துகளை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் 'ரோலர் கிராஸ் பேரியர்' தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகம் உள்ளது. வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில், நடமாடும் வனவிலங்குகளையும் வெகுவாக கண்டு ரசித்து செல்கின்றனர்.நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆழியாறில் இருந்து வால்பாறை வரும் வரையிலான, 40 கொண்டை ஊசி வளைவுகளிலும், சுற்றுலா பயணியருக்கு வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, புலிகள் காப்பகத்தில் உள்ள வனவிலங்குகள், பறவைகள் பெயர் சூட்டப்பட்ட விளம்பர பாதகைகள் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ஊட்டி, கொடைக்கானலை போன்று வால்பாறை மலைப்பாதையில் ஆபத்தான வளைவுகளில், 'ரோலர் கிராஸ் பேரியர்' தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானலையடுத்து, கோவை மாவட்டம் வால்பாறைக்கு தான் அதிக அளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், கொண்டை ஊசி வளைவுகளில் அரிய வகை வனவிலங்குகளின் பெயர் சூட்டப்பட்ட விளம்பர பாதகை வைக்கப்பட்டுள்ளன.தற்போது, ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான மலைப்பாதையில் ஆபத்தான வளைவுகளில், 'ரோலர் கிராஸ் பேரியர்' அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த மஞ்சள் நிற தடுப்பில் வாகனம் மோதினாலும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த மலைப்பாதையில், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை சாலைவிதிகளை முறைப்படி கடைபிடித்து மெதுவாக இயக்கினால், விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை