உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவர்கள் வைத்த குறி தப்பவில்லை கேரம் போட்டியில் இரு பிரிவுகளில் அசத்தல்

பள்ளி மாணவர்கள் வைத்த குறி தப்பவில்லை கேரம் போட்டியில் இரு பிரிவுகளில் அசத்தல்

கோவை: முதல்வர் கோப்பைக்கானகேரம் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் பள்ளி மாணவர்கள் அசத்தல் வெற்றி பெற்றனர்.முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியருக்கான செஸ், கேரம், சிலம்பம் போட்டிகள், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கடந்த, 11ம் தேதி முதல், 13ம் தேதி வரை நடந்தது.கேரம் போட்டியில், 114 மாணவியர், 260 மாணவர்கள் என, 374 பேர் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளை அடுத்து இறுதிப்போட்டியில், மாணவர்களுக்கான ஒற்றையர் பிரிவில், பரணிதரன், ஹரிஹரன் மற்றும்ஸ்ரீபதி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.மாணவியர் பிரிவில், சுபர்ணா, சுனேத்ரா, சோபனா ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பிடித்தனர். மாணவியர் இரட்டையர் பிரிவில், சுபர்னா, சுனேத்ரா ஆகியோர் ஜோடி முதலிடமும், பூஜாலட்சுமி மற்றும் ஹர்சினி ஆகியோர் இரண்டாம் இடமும், ராஜராஜேஸ்வரி மற்றும் ஆர்த்தி ஆகியோர் மூன்றாம் இடமும் பிடித்தனர்.மாணவர்கள் இரட்டையர் பிரிவில், பரணிதரன் மற்றும் ஹர்சித் ஆகியோர் முதலிடமும், சைலேஸ் சத்யா மற்றும் ரித்தேஷ் ஆகியோர் இரண்டாம் இடமும், விசால் மற்றும் கிசோர் ஆகியோர் மூன்றாம் இடமும் பிடித்தனர்.தொடர்ந்து, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு இன்று முதல், 19ம் தேதி வரை கேரம், செஸ் மற்றும் சிலம்பம் போட்டிகள் இடம் பெறுகின்றன. பொதுப் பிரிவினருக்கு கேரம், சிலம்பம் போட்டிகள் வரும், 19 முதல், 21ம் தேதி வரையும், அரசு ஊழியர் பிரிவில் ஆண்கள், பெண்கள் என, இரு பாலருக்கும் வரும், 23, 24ம் தேதிகளில் போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை