உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய கல்வியாண்டை வரவேற்க புதுப்பொலிவு பெறும் பள்ளிகள்

புதிய கல்வியாண்டை வரவேற்க புதுப்பொலிவு பெறும் பள்ளிகள்

கோவை;பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் கோடை விடுமுறை நிறைவடைந்து, ஜூன் 6ம் தேதி திறக்கப்படவுள்ளன. புதிய கல்வியாண்டுக்கு தயாராகும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் பராமரிப்புப் பணி, உட்கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பள்ளிகளில் வர்ணம் பூசுவது, நுழைவுவாயில், கலையரங்கம், வகுப்பறை மற்றும் பழுதடைந்த கட்டடங்களை சீரமைப்பது, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பி, கேபிள்களில் உரசும் வகையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.ராஜவீதி துணி வணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த வகுப்பறைகள் மற்றும் பள்ளி முழுவதும் வர்ணம் பூசும் பணி, துாய்மைப் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளியிலும் தூய்மைப் பணிகள் நடந்து வருகின்றன.முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்கும் பணி, துாய்மைப் பணி, புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகின்றன. பள்ளிகள் திறப்புக்கு முன், அனைத்துப் பணிகளையும் முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை