உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயர்ரக போதை பொருள் பறிமுதல்

உயர்ரக போதை பொருள் பறிமுதல்

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர், முத்தி பாளையத்தில் உள்ள தனியார் பாக்கு ஷெட்டில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களில் சிலர் உயர் ரக போதை பவுடரை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் தலைமையிலான போலீசார், நடத்திய சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை பவுடரை கைப்பற்றினர். இதனையடுத்து, அசாம் மாநிலத்தைசேர்ந்த ஆஷ்மா கா துன்,40, ஜஹீரா கா துன்,29, இத்ரிஷ் அலி, 29, குதிஜா கா துன், 37, அலிஹீசைன்,48, ரபிபுல் இஸ்லாம்,24 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, உயர்ரக போதை பவுடர் மற்றும் 1,900 காலி பிளாஸ்டிக் குப்பிகளையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி