உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிமுகம் இல்லாதவர் கணக்கிற்கு பணம் அனுப்புவது சட்டவிரோதம்

அறிமுகம் இல்லாதவர் கணக்கிற்கு பணம் அனுப்புவது சட்டவிரோதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அறிமுகம் இல்லாத ஒருவரின் வங்கி கணக்கிற்கு சட்டவிரோதமாக பணம் அனுப்புவது, பெறுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் வங்கி கணக்கு ரத்து செய்யப்படுவதுடன், அதற்கு தண்டனையும் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.பிறர் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க சைபர் மோசடி கும்பல் புதுப்புது வழிகளை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி மற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணத்தை, அவர்களது நேரடி கணக்கில் செலுத்தாமல் மற்றவர்கள் கணக்கில் செலுத்துகின்றனர். இவ்வாறாக சட்டவிரோதமாக நடக்கும் பணப்பறிமாற்றம் தண்டனைக்குறிய குற்றம் என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

சைபர் மோசடியில் ஈடுபடும் கும்பல், பணத்தை பொதுவாக மற்றவர்களின் வங்கி கணக்கில் செலுத்திவிடுவர். இவ்வாறாக கிடைக்கும் பணத்தை பற்றி நாம் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது சட்டவிரோதம். எனவே தெரியாத ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து வரும் பணம் குறித்து வங்கி அல்லது போலீசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அடிக்கடி உங்களின் வங்கி பரிவர்த்தனை விபரத்தை சரி பாரத்து கொள்வது இது போன்ற பிரச்னைகளில் சிக்காமல் இருக்க உதவும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பய்யசாமி
ஆக 13, 2024 11:27

சைபர் கிரைம் ஆளுங்களை புடிக்கவோ, புடிச்சி தூக்கில்.போடவோ துப்பில்லை. நமக்கு மட்டும் எச்சரிக்கை வரும். கூகுள் பேயில் எனது போன் நம்பரை தட்டுனா என்னோட வங்கிக்கணக்கு விவரங்கள் வந்துரும். எவனாவது தட்டி அணத்தைப் போட்டி நாம கண்குத்திப் பாம்பா பாத்துக்கிட்டிருக்கணும். ரிசர் பேங்கிற்கு தகவல் சொல்லி அனுப்பனும்.


Swaminathan L
ஆக 13, 2024 09:36

கொடுக்கும் "தெய்வம்" டிஜிடலில் கொட்டிக் கொடுப்பதாக அல்லவா, அப்படி தங்கள் வங்கிக் கணக்கில் பணம் சேர்ந்ததாக சந்தோஷிக்கிறார்கள்? விசாரணை, வழக்கு என்று வாயிற் கதவை சட்டம் தட்டும்போது தான் ஞானம் பிறக்கிறது.


vaiyapuriloganathan
ஆக 13, 2024 07:40

பணம் அனுப்புபரும் பெறுபவரும் பணம் அனுப்பும் முன்பும் பெறுவதற்கு முன்பும் வங்கியிடம் குறுஞ்செய்தி அல்லது இமெயில் அல்லது வங்கி செயலி மூலமாக அறிவித்த பின்பே பரிவர்த்தனை செய்ய முடியும் என்று நடைமுறைப்படுத்தினால் தவறுகள் குறையும்


Srinivasan Krishnamoorthy
ஆக 13, 2024 09:40

what this implies is that if any account holder receives bank credit from unknown person, he/she needs to notify the bank, otherwise ed/it authorities will assume the bank account holder is also part of the crime


vaiyapuriloganathan
ஆக 13, 2024 07:22

பணம் அனுப்புபவரும் பணம் பெறுபவரும் ஒரே மாதிரியான பரிவர்த்தனைக் காரணத்தை கட்டாயமாக குறிப்பிட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை