மேலும் செய்திகள்
பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அறிவுரை
13-Feb-2025
தொண்டாமுத்தூர்: கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டுக்கல், கெம்பனூர் பகுதியில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது.நேற்றுமுன்தினம் அதிகாலை, 2:30 மணிக்கு, கெம்பனூர் ரோட்டில் உள்ள ஒரு தோட்டத்திற்குள், சிறுத்தை புகுந்துள்ளது. அந்த சிறுத்தை, தங்கம் என்பவர் வளர்த்து வந்த ஒரு ஆட்டை கடித்து கொன்றுவிட்டு, அங்கிருந்து ஓடி விட்டது. நேற்று அதிகாலை, ஓணாப்பாளையம், சிறுவாணி ரோடு பகுதியில் உள்ள வெண்ணிலா என்பவரின் தோட்டத்தில், கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை, சிறுத்தை கடித்து கொன்றது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், ஆய்வு செய்தனர். கேமரா பொருத்தி சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.
13-Feb-2025