கோவை:கோவை, ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவர் ஒருவர், தன் தந்தையின் பர்சில் இருந்து, 4,000 ரூபாய் பணத்தை எடுத்து வந்து, பள்ளி உடற்கல்வி வகுப்பு நேரத்தில், வகுப்பறையில் அமர்ந்து, குளிர்பானத்துடன் மதுபானம் கலந்து நண்பர்களுடன் குடித்துள்ளனர். பணம் மாயமானது தொடர்பாக, மாணவரின் தந்தை விசாரித்த போது, தன் நண்பர்கள் கேட்டதால், பிரியாணி, சரக்கு வாங்க தான் பணத்தை எடுத்ததாக, அவரது மகன் கூறியுள்ளார்.அதிர்ச்சியடைந்த அவர், இத்தகவலை, பள்ளி ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநபர்களிடம் கூறி மதுபானம் வாங்கி வந்ததாகவும், குளிர்பானத்தில் கலந்து, உடற்கல்வி வகுப்பு நேரத்தில் வகுப்பறையிலேயே அமர்ந்து அருந்தியதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, அவர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' வழங்கப்பட்டது.