ரோட்டில் கழிவு நீர்
கிணத்துக்கடவு, மார்க்கெட் பகுதியில் இருந்து அண்ணா நகர் வரை சர்வீஸ் ரோட்டில் கழிவு நீர் அவ்வப்போது வழிந்தோடுகிறது. இதனால் ரோட்டில் செல்லும் வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமப்படுவதுடன், பொது சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - பிரபாகரன், கிணத்துக்கடவு. ரோட்டோரத்தில் குப்பை
கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுப்புதூரில் ரோட்டோரத்தில் அதிக அளவு குப்பை தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீச அதிக வாய்ப்புள்ளது. மேலும், பொது சுகாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - ஆனந்த், கிணத்துக்கடவு. போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி, சுப்பிரமணியர் சுவாமி கோவில் முன் ரோட்டோர பூ கடைகள் மற்றும் அதிக அளவில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வாகனங்களை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - கங்கா, பொள்ளாச்சி. அடிக்கடி மின்வெட்டு
கிணத்துக்கடவு, கம்பன் வீதியில் தினம் தோறும் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரவு நேரத்தில் மின் வெட்டு ஏற்படுவதால் துாங்குவதற்கு சிரமம் ஏற்படுகிறது. இதை மின் வாரியத்துறை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - அருண், கிணத்துக்கடவு. ரோடு மோசம்
கிணத்துக்கடவு - கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில், கருணாபுரி செல்லும் வளைவு பகுதியில் ரோட்டில் பள்ளம் போன்ற குழி ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் அதிக அளவு தடுமாற்றம் அடைகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதை கவனித்து விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - மணிகண்டன், கொண்டம்பட்டி. நகராட்சியினர் கவனத்துக்கு
உடுமலை பெருமாள் கோவில் பகுதியில் தண்ணீர் தொட்டியில் தனியார் விளம்பரங்களின் போஸ்டர் ஒட்டப்படுகிறது. இதை பார்க்கும் மக்கள் வேதனையடைகின்றனர். இதகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கிரி பிரசாத், உடுமலை. விதிமுறை மீறும் வாகனங்கள்
தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை, பழநி ரோட்டில் ரோட்டோரம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சங்கர், உடுமலை. எச்சரிக்கை தடுப்பு வேண்டும்
உடுமலை, தாராபுரம் ரோட்டிலிருந்து வாசவி நகருக்கு செல்லும் ரோட்டில் எச்சரிக்கை தடுப்புகள் இல்லாததால், வாகனங்கள் அதிவேகமாக சென்று திரும்புகின்றன. இதனால், எதிரே வரும் வாகன ஓட்டுநர்களும் விபத்துக்குள்ளாகின்றனர். அங்கு எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.- பாலாஜி, பெரியகோட்டை. தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை பூமாலை சந்து பகுதியில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. மாலையில் குழந்தைகளை அவ்வழியாக அனுப்புவதற்கு பெற்றோர் அச்சப்படுகின்றனர். இருள் சூழ்ந்திருப்பதால், பலரும் குடியிருப்புகளின் அருகில் அமர்ந்துக்கொள்கின்றனர். தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- காயத்ரி, உடுமலை. சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, கணக்கம்பாளையம் ரயில்வே கேட் அருகிலுள்ள பகுதிகளில் குப்பைக்கழிவுகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. திறந்த வெளியில் குப்பைக்கழிவுகள் குவிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியின் சுகாதாரம் முழுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வாசுதேவன், உடுமலை. பொதுமக்கள் அச்சம்
உடுமலை, ஏரிப்பாளையத்திலிருந்து தாராபுரம் ரோட்டை இணைக்கும் பகுதியில் மாலை நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவில் நடந்ததுசெல்வதற்கு அச்சப்படுகின்றனர். கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தேவராஜ், உடுமலை. வடிகாலில் புதர்செடிகள்
உடுமலை - பழநி ரோட்டில், கழுத்தறுத்தான் பள்ளத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள கழிவுநீர் அகற்றாததால், புதர், செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், அங்கு சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அங்குள்ள புதர்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகன்குமார், உடுமலை