| ADDED : ஏப் 18, 2024 05:30 AM
கோவை, : கோவை பில்டர்ஸ் அண்ட் கான்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் (சிபாகா) வின் 12வது நிர்வாக குழு, உறுப்பினர்கள் பதவியேற்பு விழா, ஓட்டல் ரெசிடென்சி டவரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக, மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன் பங்கேற்றார். 'சிபாகா'வின் புதிய தலைவராக ராமநாதன், ரம்யா செந்தில், (தலைவர் தேர்வு) செயலாளராக ரவிச்சந்திரன், பொருளாளராக சம்சுதீன், இணை செயலாளராக உதயானந்த் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக, பொறுப்பேற்று கொண்டனர்.புதிய தலைவர் ராமநாதன் பேசுகையில், ''சிபாகாவின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்களின் வழி காட்டுதலின் படி, எதிர்கால திட்டங்களை செயல்படுத்த இருக்கிறேன். இந்த ஆண்டு சிபாகா சார்பில் மூன்று திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். தண்ணீர் பாதுகாப்பு, தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இயற்கையை மாசுபடுத்தாமல், சங்க உறுப்பினர்கள் கட்டுமான பணிகள் செய்ய, ஆலோசனைகள் வழங்கப்படும்,'' என்றார்.ரத்னா குழும நிறுவனங்களின் தலைவர் பழனியப்பன் மற்றும் டிசைன் குரூப் ஆர்க்கிடெக்ட் லஷ்மணன், லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குனர் முத்துராமன், பரோ டெக் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.