உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிவானந்த அனுபவ பயிற்சி நாளை ஒருநாள் நடக்கிறது

சிவானந்த அனுபவ பயிற்சி நாளை ஒருநாள் நடக்கிறது

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், ஒரு நாள் சிவானந்த அனுபவ பயிற்சி வகுப்பு நாளை நடக்கிறது.பொள்ளாச்சி கே.கே.ஜி., திருமண மண்டபத்தில், ஒரு நாள் சிவானந்த அனுபவ பயிற்சி வகுப்பு நாளை (25ம் தேதி) காலை, 7:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கிறது.பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், நேரடி அருளாசி வழிகாட்டுதலோடு, சிவநாம ஜெபம், தியான சிகிச்சை, யோகப்பயிற்சிகள், ஆரோக்கிய ரகசியங்கள், சிவஞானம், சத்சங்கம், சிவ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.வகுப்பில் பங்கேற்க அனுமதி இலவசமாகும். 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம்; பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை