உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாறாவது வாரமாக குளத்தில் களப்பணி

நுாறாவது வாரமாக குளத்தில் களப்பணி

அன்னுார்:அன்னுார் குளத்தில், 100வது வாரமாக நேற்றுமுன்தினம் களப்பணி நடந்தது.அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 119 ஏக்கர் பரப்பளவு குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குளத்தில் அன்னுார் குளங்கள் அறக்கட்டளை சார்பில், கடந்த 2022 ஆக. 15ம் தேதி களப்பணி துவங்கியது.ஒவ்வொரு வாரமும், ஞாயிறன்று களப்பணி நடந்தது. 100வது வாரத்தை முன்னிட்டு, நேற்று ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் இருபுறமும் புதர்கள், குப்பைகள் அகற்றப்பட்டன. ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சப்பட்டது. களைகள் அகற்றப்பட்டன.புதிதாக வேம்பு, பூவரசு, புங்கன், கொய்யா, இலவம், சொர்க்க ரதம் உள்ளிட்ட எட்டு வகையைச் சேர்ந்த 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் அன்னுார் குளங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை