உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.எம்.எஸ்., கல்லுாரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா தேர்வு

எஸ்.எம்.எஸ்., கல்லுாரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா தேர்வு

கோவை:எஸ்.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில், ஸ்போர்ட்ஸ் கோட்டா தேர்வு நாளை காலை நடக்கிறது.விளையாட்டுத்துறையில் திறமையான மாணவர்களை கண்டறிந்து, சலுகைக்கட்டணத்தில் கல்வி அளிக்கும் நோக்கில், பேரூர் சாலையில் உள்ள எஸ்.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி சார்பில், ஸ்போர்ட்ஸ் கோட்டா தேர்வு நாளை (மே 11) காலை, 8:00 மணி முதல் நடத்தப்படுகிறது.இதில் தடகளம், இறகுப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, செஸ், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட்பால், டேபிள் டென்னிஸ், கபடி, டென்னிஸ், வலுதுாக்குதல், பளு துாக்குதல், நீச்சல், கராத்தே, சிலம்பம், வில் வித்தை, பாக்ஸிங், டேக்வாண்டோ உள்ளிட்ட விளையாட்டுகளில், திறமையான வீர - வீராங்கனைகள் பங்கேற்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 96777 36314, 80155 66463ஆகிய எண்களில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ