மேலும் செய்திகள்
நீர்த்தொட்டியில் சுரக்கும் கழிவுநீர் ஊற்று
26-Aug-2024
போத்தனூரிலுள்ள சாய் நகரில், சாய் அமரந்தா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு குடியிருப்போரை ஒருங்கிணைக்கும் விதமாக, 'ஸ்பார்கிள் கார்னிவல் -2024' எனும் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது.சாய் நகர் குடியிருப்போர் சங்க முன்னாள் நிர்வாகி ஸ்ரீகலா, நாசர் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். முன்னதாக, அடுக்குமாடி குடியிருப்பு சங்க செயலாளர் தில்தார்ஜான் வரவேற்றார். பெண்களுக்கான தனி வெப்சைட்டை கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார்.குடியிருப்பை சேர்ந்த பெண்கள், காளான், சிக்கன் பிரியாணி, கேரட் கீர், பலவித ஊறுகாய், குனாபா, பால் கப்பா, கேக், பாயாச வகைகள் தயாரித்து, விற்பனைக்கு வைத்திருந்தனர்.கம்மல், நகைகள், கைவினைபொருட்கள் தயாரிப்பிலும், தங்கள் கைவண்ணத்தை காண்பித்தனர். சேலை, சுரிதார், நைட்டி என துணி ரகங்களும், பர்னிச்சரும் விற்பனையில் பறந்தன.டாக்டர் பசல், நுரையீரல் பாதிப்பை கண்டறியும் சோதனையை, கட்டணமின்றி மேற்கொண்டார். டாக்டர் சபானா சித்த மருத்துவ சிகிச்சையளித்தார். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குழுவினர் கண் பரிசோதனை மேற்கொண்டனர். அலிப் டென்டல் கேர் சார்பில் பல் பரிசோதனை செய்யப்பட்டது.மாலையில் குட்டீஸ், பெண்களுக்கு பல்வேறு போட்டிகள், நடனம் நடத்தப்பட்டது. அத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.ஏற்பாடுகளை சங்க தலைவர் அலிப் அகமது, துணை தலைவர் மதுசூதனன், பொருளாளர் மொய்தீன், செயலாளர் தில்தார் ஜான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
26-Aug-2024