உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழை வேண்டி சிறப்பு பூஜை

மழை வேண்டி சிறப்பு பூஜை

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில் உள்ள கோவில்களில், மழை வேண்டி தீர்த்தம் எடுத்து சிறப்பு பூஜைகள் நடந்தது.கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சி மக்கள் மழை வேண்டி, ஆல்கொண்ட பெருமாள் கோவிலில் இருந்து, மாரியம்மன் மற்றும் சக்தி மாரியம்மன் கோவிலுக்கு மேள தாளங்களுடன், தீர்த்தம் எடுத்து வந்து வழிபட்டனர்.மாரியம்மன் மற்றும் சக்தி மாரியம்மன் கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், கோதவாடி மற்றும் சுற்று வட்டார கிராமப்புறங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ