உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் சதுர்த்திக்கு இந்தாண்டு ஸ்பெஷல்!

விநாயகர் சதுர்த்திக்கு இந்தாண்டு ஸ்பெஷல்!

அடுத்த வாரம், 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி, நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கோவையில் விநாயகர் சிலை தயாரிப்பு, சூடுபிடித்துள்ளது.சுண்டக்காமுத்துார் பகுதியில் செயல்படும் இந்த நிறுவனத்தினர் காகிதக்கூழ், களிமண் கொண்டு விநாயகர் சிலைகள், கொலு பொம்மைகளை தயாரித்து வருகின்றனர்.ராஜகணபதி நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் கூறுகையில், ''ஆண்டு முழுவதும் உழைத்து விநாயகர் சதுர்த்திக்காக சிலைகளை தயாரிக்கிறோம். அப்போது தான் சீசனுக்குள், சிலைகளை டெலிவரி செய்ய முடியும். 2 இன்ச் முதல், 2 அடி வரை உள்ள விநாயகர் சிலைகள் களிமண் கொண்டும், 2 அடிக்கு மேல் உள்ள சிலைகள் காகிதக்கூழ் கொண்டும் தயாரிக்கப்படுகின்றன. நீரில் கரையும் வாட்டர் கலர் மட்டுமே பயன்படுத்துகிறோம்,'' என்றார். ''இந்தாண்டு என்ன ஸ்பெஷல்?'' என்று கேட்டோம்.''இந்தாண்டு ஆஞ்சநேயர் விநாயகர், முருகன் விநாயகர், மீன் விநாயகர், பெருமாள் விநாயகர், மங்கள விநாயகர், சிம்ம விநாயகர், அன்ன விநாயகர், லட்சுமி விநாயகர், குபேர விநாயகர், தாமரை விநாயகர் உட்பட, 50 வகையான விநாயகர் சிலைகள் உள்ளன. 10 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையும் தயாரித்து இருக்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி