தி.மு.க., இளைஞரணி சார்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
கோவை:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், 'என் உயிரினும் மேலான' என்ற தலைப்பில் கல்லுாரி மாணவ - மாணவியருக்கான பேச்சுப்போட்டி, டாடாபாத்தில் உள்ள ஓட்டல் அரங்கில் நேற்று நடந்தது.மாநகர் மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் தனபால் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் துவக்கி வைத்தார். நடுவர்களாக பொன் முத்துராமலிங்கம், லெனின், சுகுணா திவாகர் ஆகியோர் இருந்தனர்.போட்டியில், 48 மாணவியர், 56 மாணவர்கள் என, 104 பேர் பங்கேற்றனர். இதில், 4 பேர் மாணவர்கள், 8 மாணவியர் என, 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், மேயர் ரங்கநாயகி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் அப்பாஸ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், லாராதேவ் கிருபா, மாநில நிர்வாகிகள் தமிழ்மறை, மீனா ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.