உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோடு பணிகளை விரைந்து முடியுங்க! வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

ரோடு பணிகளை விரைந்து முடியுங்க! வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - உடுமலை ரோடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி -- திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.மொத்தம், 3,649 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. பொள்ளாச்சி -- மடத்துக்குளம் இடையே, 50.07 கி.மீ.,; மடத்துக்குளம் --- ஒட்டன்சத்திரம், 45.38 கி.மீ.,; ஒட்டன்சத்திரம் -- திண்டுக்கல்- கமலாபுரம், 36.51 கி.மீ., என, 131.96 கி.மீ., துாரத்துக்கு ரோடு அமைக்கப்படுகிறது.இந்நிலையில், பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி, கோலார்பட்டி அருகே பணிகள் முழுமை பெறாத சூழலில், வாகன ஓட்டுநர்கள் தாறுமாறாக செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்படுகின்றன.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:பொள்ளாச்சி, கோலார்பட்டி அருகே நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடையாத நிலையில், சிலர், பணிகள் முடிவடையாத சாலை வழியாகவும், சிலர் மாற்று வழித்தடத்திலும் பயணிக்கின்றனர்.இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக செல்லும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிகள் முடிவடையாத பகுதியில் வாகனங்கள் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்கலாம்.மேலும், பணிகளை தீவிரப்படுத்தி விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை