உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சீர்காழி மாரியம்மன் கோவிலில் வசந்த உற்சவம்

சீர்காழி மாரியம்மன் கோவிலில் வசந்த உற்சவம்

கோவை, : ஆவாரம்பாளையம் இளங்கோ நகரிலுள்ள, சீர்காழி மாரியம்மன் கோவிலில்,வைகாசி வசந்த உற்சவ விழா பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.துவார சக்தி பிரதிஷ்டை மற்றும் கிராமசந்தி நிகழ்ச்சியுடன் விழா, கடந்த 10ம் தேதி துவங்கியது. முளைப்பாலிகை இடுதல், புனித தீர்த்தக்குட அபிஷேகம், ரக் ஷா பந்தனம், மஹாகணபதி ஹோமம், பொரிசாட்டுதல், கம்பம்நடுதல், பூவோடு எடுத்து விளையாடுதல், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், திருக்கரக ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து பொங்கல் வைத்தலும், மஹாஅன்னதானமும் நடந்தது. நேற்று மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம், மஞ்சள் நீர் விளையாடுதலோடு விழா நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி