உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா

ராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா

கோவை : கோதண்டராமர் கோவிலில் நேற்று ஸ்ரீராமநவமி விழா, பக்தர்கள் புடைசூழ விமரிசையாக நடந்தது. ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் கடந்த ஏப்.,8ல் திருமஞ்சனம், சாந்தி ஹோமத்துடன் ஸ்ரீ ராமநவமி உற்சவம் துவங்கியது. ஏப்., 15ல் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஸ்ரீ ராமநவமியான நேற்று காலை 7:00 மணிக்கு சதுஸ்தானார்ச்சனம், மஹாபூர்ணாஹூதி, 12:00 மணிக்கு தீர்த்தவாரி, துவாதசாராதனம், இரவு 7:00 மணிக்கு, புஷ்பகவிமானம் புறப்பாடு, கொடி இறக்குதல் ஆகியவை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி