உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

கருமத்தம்பட்டி;செல்லப்பம்பாளையம் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.கணியூர் அடுத்த செல்லப்பம்பாளையம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பல்வேறு வகையான ஹோம திரவியங்களுடன், நான்கு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. கோபுரம் மற்றும் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை