உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல்: கோவையில் நாளை தேர்தல் பிரசாரம்

ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல்: கோவையில் நாளை தேர்தல் பிரசாரம்

கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்., முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோர், கோவையில் நாளை (12ம் தேதி) தேர்தல் பிரசாரம் செய்கின்றனர்.கோவை லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக, கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சியில் ஈஸ்வரசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தொகுதி பொறுப்பாளரான, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவையில் முகாமிட்டு, தொழில்துறை நிர்வாகிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.மா.கம்யூ., தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளர் சுபேர்கான் உள்ளிட்டோர், பிரசாரம் செய்திருக்கின்றனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்., முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோர், நாளை (12ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு, கோவை எல் அண்டு டி பைபாஸில் செட்டிபாளையம் அருகே உள்ள மைதானத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகின்றனர். 12 சட்டசபை தொகுதிகளில் இருந்து, ஒரு லட்சம் பேரை திரட்டி வர வேண்டுமென, கட்சியினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.மேடை அமைக்கும் பணியை, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு நேற்று பார்வையிட்டார். மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் ஏற்பாடுகளை விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

KumaR
ஏப் 11, 2024 16:40

மோடிஏதோ தமிழ்நாட்டுல வந்து தமிழ் பேசாம ஹிந்தி பேசிட்டு இருக்காருன்னு திமுக தலைவர் சொன்னாரு இப்ப ராகுல் காந்தி வந்து தமிழ் நாட்டுல தேர்தல் பிரச்சாரம் பண்ண போறாரு அவருக்கு மட்டும் தமிழ் தெரியுமா இப்ப திமுக தலைவர் என்ன பதில் சொல்லுவாரு


kuppusamy India
ஏப் 11, 2024 13:39

அருமையான தெருக்கூத்து நாடகம் இருக்கு......


ஆரூர் ரங்
ஏப் 11, 2024 12:42

ராகுலின் பேச்சை ஸ்டாலின் மொழிபெயர்ப்பாரா? தங்கபாலு ரிடையர்டு?


Anand
ஏப் 11, 2024 12:37

ஒரேமேடையில் இரண்டு ..., விளங்கிடும்


sridhar
ஏப் 11, 2024 12:29

ஏற்கனவே வெயில் கொடுமை, இதுல இதுங்க தொல்லை வேற


katharika viyabari
ஏப் 11, 2024 12:14

ஆண்டவா நாட்டை காப்பாற்று


Narayanan
ஏப் 11, 2024 12:08

இரண்டு பேரும் என்ன பேசி மக்களை ஏமாற்றுவார்கள் ? மொழி தெரியாமல் பேசுவார்கள் வேடிக்கை நிறைந்த மனிதர்கள்


raja
ஏப் 11, 2024 12:00

அது ஒரு உதவாகர இது ஒரு உருபிடாதது ரெண்டும் சேர்ந்தா விளங்கிடும் தமிழ்நாடு


Lion Drsekar
ஏப் 11, 2024 11:37

இரண்டு பேருமே அடிக்கடி வெளிநாடு போகுபவர்கள் ஒருவர் குடும்பத்தோடு போவார் மற்றொருவர் தனியாக செல்வார் ? தேர்தல் முடிந்ததும் பார்க்கலாம்? மக்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழலாம், ஆனால் இங்குதான் அதற்க்கு வழியே இல்லையே, ஆகவே இவர்கள் காட்டில் மழைதான், வாழ்த்துக்கள், வந்தே மாதரம்


அருண் பிரகாஷ் மதுரை
ஏப் 11, 2024 11:37

கூட்டம் திரட்டுவது பெரிய விஷயமா...கூட்டம் தானாக திரள வேண்டும்..ரோடு ஷோ மாதிரி.இதெல்லாம் திராவிட மாடலுக்கு புரியாது.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி