உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில கபடி போட்டியில்ரத்தினம் கல்லுாரி சாம்பியன்

மாநில கபடி போட்டியில்ரத்தினம் கல்லுாரி சாம்பியன்

கோவை:மேட்டுப்பாளையத்தில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் ரத்தினம் கல்லுாரி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.மேட்டுப்பாளையம், அம்மன் பழத்தோட்டம் கபடி குழு சார்பில் 45வது மாநில கபடி போட்டி சிறுமுகையில் நடந்தது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று போட்டியிட்டன.இதன் முதல் அரையிறுதிப்போட்டியில் ரத்தினம் கல்லுாரி அணி 36 - 24 என்ற புள்ளிக்கணக்கில் ஏ.ஜெட்., ஆனந்தன்கரை அணியையும், இரண்டாம் அரையிறுதியில் ராகவேந்திரா கபடி அணி 29 - 10 என்ற புள்ளிக்கணக்கில் சிவா நினைவு கபடி அணியையும் வீழ்த்தின.இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ரத்தினம் கல்லுாரி அணி 28 - 21 என்ற புள்ளிக்கணக்கில் ராகவேந்திரா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சிவா நினைவு கபடி அணி வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களை ரத்தினம் கல்லுாரி முதன்மை செயல் அலுவலர் மாணிக்கம், முதல்வர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி