உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவியர் விழிப்புணர்வு பேரணி

மாணவியர் விழிப்புணர்வு பேரணி

அன்னுார்:கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின், தோட்டக்கலை மாணவியர், 11 பேர் ஊரக தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்தில், அன்னுார் பகுதியில் தங்கி உள்ளனர்.நேற்று முன்தினம் ஒட்டர்பாளையத்தில், மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டனர். வேம்பு, பூவரசு, உள்பட ஏழு வகைகளை சேர்ந்த மரக்கன்றுகளை நட்டனர். அப்பகுதி பொதுமக்கள், சிறுவர் சிறுமியரையும் இதில் ஈடுபடுத்தினர். பின்னர் மரம் நடுவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்தினர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை