உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மானிய விலையில் பொட்டாசியம் பாக்டீரியா திரவ உரம்; விவசாயிகளுக்கு அழைப்பு

மானிய விலையில் பொட்டாசியம் பாக்டீரியா திரவ உரம்; விவசாயிகளுக்கு அழைப்பு

சூலூர்;அதிக பலன் தரும் பொட்டாசியம் பாக்டீரியா திரவ உரம், மானிய விலையில் வேளாண் துறையால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பொட்டாசியம் சத்து காய்கறிகள், வாழை, தென்னை, பாக்கு போன்ற பயிர்களுக்கு முக்கியமானது ஆகும். இச்சத்து தேங்காய் பருப்பின் தடிமனை அதிகரிப்பதிலும் வாழைத்தாரின் எடையையும், எண்ணிக்கையையும் அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இச்சத்து மண்ணில் பயிர் தேவைக்கு அதிகமாக நம் பகுதியில் உள்ளது. இதுகுறித்து சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை வட்டார வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. களிமண்ணோடு கலந்து சிலிக்கா, அலுமினியம், பொட்டாசியம் ஆகியவற்றின் கூட்டு கலவையாக உள்ளது. அதனால், அவற்றை பயிர்களால் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. இந்த கலவையில் இருந்து பொட்டாசியத்தை தனியாக பிரித்து பயிர்களுக்கு கொடுக்கும் பணியை பொட்டாசியம் பாக்டீரியா செய்கிறது. இவ்வாறு நடக்கும் போது,சிலிக்கேட் உரமும் தாவரங்களுக்கு கிடைக்கிறது. இந்த சிலிக்கேட்டானது திரவமாக தாவரங்களின் இலைகளின் செல் சுவரில் படிந்து தடிமனான அடுக்கை உருவாக்குகிறது. அதனால், பூச்சி தாக்குதல் வெகுவாக குறையும். இவ்வாறு நன்மை தரும் பொட்டாசியம் பாக்டீரியா, 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் விலை, 300 ரூபாய். மானியம் கழித்து, 150 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் அந்தந்த வேளாண் துறை அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை