உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரமான விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

தரமான விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

கோவை : தரமான விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, கிலோவிற்கு ரூ. 30 உற்பத்தி மானியம் வழங்கப்படும் என, வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார், 26,088 எக்டரில் (64,464.85 ஏக்கர்) சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு நல்ல மகசூல் தரும் வகையில், கோ32 மற்றும் கே12 ரக விதைகளை வழங்க, உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டது. அதன்படி, கோ32 மற்றும் கே12 ரக விதைகளை உற்பத்தி செய்ய சூலுார், கண்ணம்பாளையம், ஊத்துப்பாளையம், இடிகரை, நடுப்பாளையம், பீடம்பள்ளி, ஒட்டர்பாளையம், ஊஞ்சம்பாளையம், அப்பநாயக்கன்பட்டி, பதுவம்பள்ளி ஆகிய கிராமங்களில், அமைக்கப்பட்ட விதைபண்ணைகளை வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, நுண்ணுாட்டச்சத்து, பயிர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ், ஒரு கிலோவுக்கு ரூ.30 உற்பத்தி மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆய்வின் போது, வேளாண் துணை இயக்குனர் புனிதா, உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க கோவை மாவட்ட ஆலோசகர் மாரியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை