உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலத்தில் ஒழுகும் மழை நீரால் அவதி

பாலத்தில் ஒழுகும் மழை நீரால் அவதி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் அருகே, மேம்பாலத்தில் இருந்து மழை நீர் ஒழுகுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடு வழியாக, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கிறது. இதில், மழை பெய்யும் நேரத்தில் மக்கள் பலர் பாலத்தின் கீழ் பகுதியல் நின்று செல்கின்றனர்.பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ரோட்டின் நடுவே உள்ள மேம்பாலத்தின் தடுப்புகளில் இருந்து மழை நீர் முறையாக குழாய் அமைத்து தரை பகுதிக்கு கொண்டுவரப்படாமல், தடுப்புகளில் இருந்து ரோட்டில் ஒழுகும் படி உள்ளது.மழை நீர் ஒழுகும் இடத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் பஸ் நிறுத்தி இயக்கப்படுவதால், பயணியர் அவதிப்படுகின்றனர். மேலும், பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் அனைத்து வாகனங்கள் மீதும் மழை நீர் விழுவதால் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை