உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இருகூர் சுரங்க பாதையில் தேங்கும் மழை நீரால் அவதி

இருகூர் சுரங்க பாதையில் தேங்கும் மழை நீரால் அவதி

சூலுார்:இருகூரில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் அதிகளவில் தேங்குவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சூலுார் அடுத்த இருகூர் பேரூராட்சியில் மாசாணியம்மன் கோவில் அருகே ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இங்கு மழை நீர் அதிகளவில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இருகூரில் ரயில் ரோட்டுக்கு தெற்கு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர், ஆபத்தான முறையில் ரயில் ரோட்டை கடந்து சென்று வந்தனர். இல்லையென்றால், இருகூர் அங்காளம்மன் கோவில் அருகே மேம்பாலத்தில் ஏறி, இருகூர் பிரிவு அருகே இறங்கி மீண்டும் பள்ளிக்கு வரவேண்டும். மாணவ, மாணவியரின் அவதியை போக்கும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். அதன் பயனாக, சில ஆண்டுகளுக்கு முன் சுரங்கப்பாதை கட்டப்பட்டது. அதன் வழியாக, பொதுமக்கள் மட்டுமில்லாமல், கார்கள், மினி ஆட்டோக்களும் சென்று வருகின்றன. ஆனால், மழை பெய்தால், சுரங்கப்பதையில், ஐந்து அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கிவிடும். இதனால், அவ்வழியை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி கூறுகையில்,சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கினால் உடனுக்குடன், மோட்டார் வைத்து வெளியேற்றி வருகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ