மேலும் செய்திகள்
காலமானார் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
2 hour(s) ago
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
2 hour(s) ago
ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்
2 hour(s) ago
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
3 hour(s) ago
போத்தனூர்;சுந்தராபுரத்தில் முதல் முறையாக, 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று பதிவானது.மாநிலம் முழுவதும் இவ்வாண்டு பிப்., முதலே வெயிலின் தாக்கம் அதிகமானது. தொடர்ந்து வந்த மார்ச் மாதத்திலும் தாக்கம் குறையவில்லை.இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சுந்தராபுரம், காந்தி நகரிலுள்ள தங்கள் அலுவலகத்தில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன், வெப்ப அளவீட்டு கருவியை நிறுவியுள்ளனர். இதில் இம்மாதத்தின் துவக்கத்தில், 40.3 மற்றும் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தொடர்ந்து நேற்று, 40.4 டிகிரி செல்சியஸ் பதிவானது.அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில், சுந்தராபுரம் பகுதியில் அதிகபட்சமாகவும், முதல் முறையாகவும், 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் இன்று (நேற்று) பதிவானது. நேரம் செல்ல, செல்ல குறைய துவங்கியது. இது கடந்த, 15 ஆண்டுகளில் இல்லாததாகும். இதுவரை அதிகபட்சமாக, 39 டிகிரி செல்சியஸ் வெப்பம்தான் பதிவாகியுள்ளது,''என்றார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago