உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம் : தேவாலயங்களில் சாம்பல் புதன் அனுசரிப்பு

கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம் : தேவாலயங்களில் சாம்பல் புதன் அனுசரிப்பு

கோவை: கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று துவங்கியது. துவக்க நாளான நேற்று, தேவாலயங்களில் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை, நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர். 40 நாட்கள் நோன்பு இருந்து, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை, ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். முதல் நாளான நேற்று, மாநகரில் புனித மிக்கேல் அதிதுாதர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணியார் தேவாலயம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், கோவைப்புதுார் குழந்தை இயேசு ஆலயம், போத்தனுார் புனிய சூசையப்பர் ஆலயம், கார்மெல் நகர் கார்மெல் அன்னை ஆலயம், கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா உள்ளிட்ட, பல்வேறு தேவாலயங்களில் காலை மற்றும் மாலை சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலியில் பங்கேற்ற பக்தர்கள், நெற்றியில் சாம்பல் பூசி பிரார்த்தனை செய்தனர். சாம்பல் புதனையடுத்து, குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன், புனித வெள்ளி என ஏப்., 20ம் தேதி (ஈஸ்டர்) வரை தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூரும் வகையில், தேவாலயங்களில் சிலுவை பாதை ஆராதனை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை