உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ்சை மறித்த யானை; போக்குவரத்து பாதிப்பு 

பஸ்சை மறித்த யானை; போக்குவரத்து பாதிப்பு 

வால்பாறை : வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் முகாமிட்டுள்ள யானை அரசு பஸ்சை வழிமறித்ததால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் யானைகள் தனித்தனி கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. வால்பாறை - சாலக்குடி ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் அதிகளவில் இங்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி ரோட்டில் கடந்த சில நாட்களாக 'கபாலி' என பெயரிடப்பட்ட யானை, அந்த வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களை வழிமறித்து வருகிறது.இந்நிலையில், நேற்று மதியம், 12:00 மணிக்கு வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் உலா வந்த 'கபாலி'யானை, மளுக்கப்பாறை நோக்கி சென்ற கேரள அரசு பஸ்சை வழிமறித்தது. இதனால், சுற்றுலா வாகனங்களும் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற, வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால், நேற்று வால்பாறை - சாலக்குடி ரோட்டில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ