உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எல்லாத்தையும் சரி செய்யணும் முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தல்

எல்லாத்தையும் சரி செய்யணும் முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தல்

சூலுார்:சொந்த வார்டு எது என்று கூட தெரியாமல் சிலர் வேலை செய்துள்ளீர்கள். இதுதான் தோல்விக்கு காரணம். எல்லாத்தையும் சரி செய்யணும்,என, முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.சூலுார், சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் கூட்டம், சூலுார் பிரிவு, பாப்பம்பட்டி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. பீடம் பள்ளியில் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி, ஒன்றிய செயலாளர் குமாரவேல், சூலுார் நகர செயலாளர்கள் கார்த்திகை வேலன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சூலுார், கண்ணம்பாளையம், பள்ளபாளையம் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. பூத் வாரியாக வாங்கிய ஓட்டுகளை ஆய்வு செய்த பின்,முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:பல பூத்துகளில் தி.மு.க., மற்றும் பா.ஜ., வை விட நாம் ஓட்டு குறைவாக வாங்கியுள்ளோம். சொந்த வார்டு எது எனக்கூட தெரியாமல் சிலர் வேலை செய்துள்ளீர்கள். இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். தோல்விக்கு இதுதான் காரணம். வரும் சட்டசபை தேர்தலுக்குள் எல்லாத்தையும் சரி செய்யணும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி