உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பைக்கிடங்கில் கட்டுக்குள் வந்தது தீ!

குப்பைக்கிடங்கில் கட்டுக்குள் வந்தது தீ!

போத்தனூர்:போத்தனூர் - செட்டிபாளையம் சாலையில், மாநகராட்சியால் கொட்டப்படும் குப்பை கழிவில் கடந்த, 6ல் தீ பற்றியது. 12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன், நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் இரவு, தீ பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. தீ, குப்பை கழிவில் தொடர்ச்சியாக பரவாமல் தடுக்க, இடைவெளி ஏற்படுத்தப்பட்டது.இதன் பலனாக நேற்று, தீ கட்டுக்குள் வந்தது. இருப்பினும் புகையை கட்டுப்படுத்தவும், தீ மீண்டும் பரவாமல் தடுக்கும் பொருட்டும், கழிவில் தண்ணீர் பீய்ச்சியடிப்பது தொடர்ந்தது. இதனால் சுற்றுப்பகுதிகளில் பரவிய புகைமண்டலமும் குறைய துவங்கியது. இன்று அனைத்து பணிகளும் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை