உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகளை கண்காணிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை

யானைகளை கண்காணிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை

கோவை:வனத்தில் இருந்து வெளிவரும் யானைகளை கண்காணிக்க, வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.கோவை வனக்கோட்டம் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, காரமடை, பெரியநாயக்கன் பாளையம், சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் என, ஏழு வனச்சரகமாக பிரிக்கப்பட்டுள்ளது. யானை, கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதியில் உள்ளன. வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள், விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.இதுதவிர, ஒவ்வொரு ஆண்டும் மனித-யானை மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், இருதரப்பிலும், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதைத்தடுக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.சமீபகாலமாக வனத்தை விட்டு யானைகள் வெளியில் வருவது அதிகரித்துள்ளது. இதைத்தடுக்க, மண்டல அளவில் நான்கு சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''தலா ஒரு குழுவுக்கு, 20 ஊழியர்கள் இடம்பெற்றிருப்பர். கடந்த காலங்களில் யானைகள் அதிகளவில் வெளியேறிய பகுதிகள் குறித்த தகவல்களின் அடிப்படையில் குழுக்கள் செயல்படும். யானைகள் வெளியேறும் போது, அதுகுறித்து கண்டறிந்து அதற்காக உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுக்களில், தகவல்களை பரிமாறி எச்சரிக்கை செய்வர். யானையை மீண்டும் வனத்துக்குள் அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்வர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி