உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புத்தகம் வாசிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு பொழுதுபோக்குகளில் கிடைக்காது! புத்தக கண்காட்சி குறித்து வாசகர்கள் கருத்து

புத்தகம் வாசிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு பொழுதுபோக்குகளில் கிடைக்காது! புத்தக கண்காட்சி குறித்து வாசகர்கள் கருத்து

கோவை;கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி, அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக, இளைய தலைமுறையினரை அதிகம் காண முடிந்தது, ஆரோக்கியமான விஷயம் ஆக பார்க்கப்படுகிறது. புத்தக கண்காட்சி குறித்து, நம் கோவை மக்கள் சொல்வதென்ன?நிகழ்ச்சிகள் குறைவுஎனக்கு சொந்த ஊர் ஈரோடு. அங்கும் இதுபோல் புத்தக கண்காட்சி நடக்கும். அங்கு போய் நிறைய புக்ஸ் வாங்குவேன். இந்த வருஷம் இங்கு வாங்கலாம் என வந்தேன். இங்கும் சிறப்பாக உள்ளது. கொஞ்சம் புத்தகம் வாங்கி இருக்கிறேன். ஈரோட்டில் நடக்கும் போது, அங்கும் வாங்குவேன். கண்காட்சியையொட்டி, அங்கு நிறைய நிகழ்ச்சிகள் இருக்கும். இங்கு குறைவாக உள்ளது.- கிருஷ்ணகுமார் வாசகர்அன்பளிப்பாக அளிப்பேன்கோவையில் நடக்கும் எல்லா புத்தக கண்காட்சிக்கும் தவறாமல் செல்வது வழக்கம். 10 நாட்கள் நடக்கிறது என்றால், 10 நாட்களும் இங்கு வருவேன். புதிய புத்தகங்களின் வாசனையை நுகர்ந்து ரசிப்பேன். நிறைய நுால்கள் வாங்குவேன். அதை நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பேன். சென்னைக்கு அடுத்து கோவையில்தான் புத்தக கண்காட்சி சிறப்பாக உள்ளது.- விஜயராகவன்வேளாண் பல்கலை முன்னாள் இயக்குனர்பொது அறிவு வளரும்நான் மூன்று வருடமாகதான், 'அவுட் ஆப் சிலபஸ்' புத்தகங்கள் படிக்கிறேன். சுயமுன்னேற்ற நுால்கள், வணிகம் சம்பந்தமான நுால்கள் படிக்க பிடிக்கும். பாட புத்தகங்களை அவசியம் படித்துதான் ஆக வேண்டும். ஆனால் பொது அறிவு வளரவேண்டும் என்றால், இந்த மாதிரி புத்தகங்களைதான் படிக்க வேண்டும்.- அருண் பாலாஜி கல்லுாரி மாணவர்தொடர்ந்து படிப்பேன்ஸ்கூல், காலேஜ் புக்ஸை தவிர வேறு புத்தகங்களை படிக்க வாய்ப்பு இல்லை. சுதா மூர்த்தி புக்ஸ் படித்திருக்கிறேன். இங்கு வந்த பிறகுதான் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது. புக்ஸ் தலைப்பு எல்லாம் சூப்பராக இருக்கிறது. இப்போது கொஞ்சம் புக்ஸ் வாங்கி இருக்கிறேன். இனி தொடர்ந்து படிப்பேன். -நிகிதா கல்லுாரி மாணவிலீவில் படிப்பேன்நான் முதல் முறையாக புத்தக கண்காட்சிக்கு வருகிறேன். இவ்வளவு புத்தகங்களை பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது. ஆங்கிலம், தமிழ் இரண்டும் வாங்கி இருக்கிறேன். புத்தகம் படித்தால் மொபைல் பார்க்கும் பழக்கம் குறையும். விடுமுறை நாட்களில் புத்தகம் படிக்க திட்டமிட்டு இருக்கிறேன்.- சார்லெட் கல்லுாரி மாணவிவாசிப்பதால் மகிழ்ச்சிஎனக்கு இலக்கிய புத்தகங்கள், தன்னம்பிக்கை புத்தகங்கள் படிக்க பிடிக்கும். புத்தக கண்காட்சிக்கு வரும் போது பிடித்த புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்து கொள்வேன். நேரம் கிடைக்கும் போது படிப்பேன். புத்தகம் படிக்கும் போது இருக்கும் மகிழ்ச்சி, வேறு பொழுது போக்குகளில் இல்லை அதனால் புத்தகம் படிப்பதே நல்லது.- வனுஷா கல்லுாரி மாணவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ