உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்களுக்குள் ஒளிந்திருக்கும்கோடிகள் ஈட்டும் தொழிலதிபர்

உங்களுக்குள் ஒளிந்திருக்கும்கோடிகள் ஈட்டும் தொழிலதிபர்

மாணவர்கள் கூட்டத்தில் நிறைந்திருந்தது காவலர் சமுதாயக் கூடம். அன்றைய பேச்சாளர், 'படிப்பு முடித்த பின், யாருக்கெல்லாம் வேலைக்கு செல்ல வேண்டும்' என்ற ஆசையிருக்கிறது என்று கேட்டவுடன், கை துாக்கியவர்களின் எண்ணிக்கை சொற்பம் தான்.சரி... யாருக்கெல்லாம் தொழில்முனைவோராக ஆசை இருக்கிறது என்று கேட்டவுடன், ஒரே ஒரு மாணவி மட்டும் கை உயர்த்தி விருப்பம் தெரிவித்தார். அந்த மாணவிக்கு அரங்கத்தில் கரகோஷம் எழுப்பினர். நீங்கள் விரும்பினால் நிச்சயம் தொழில் முனைவோர் ஆகலாம் என்று தெரிவித்தவர், மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) முதுநிலை மேலாளர் ஈஸ்வர மூர்த்தி.பொருளாதாரம் மிக முக்கியம். அதை எப்படி ஈட்டுவது என்பது அதை விட முக்கியம். வேலைக்கு சென்று, மாத சம்பளம் வாங்குவதில் ஒரு பாதுகாப்பு இருப்பதாக தோன்றினாலும், தொழில் முனைவோராக உருவாகி, மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கலாம். உங்கள் திறமையை தொடர்ந்து பட்டைத் தீட்டிக் கொண்டே இருப்பீர்கள்.அப்படித் தான் இருக்க வேண்டும். தொழில் முனைவோராக மாற, கனரா வங்கி சார்பில், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள எங்கள் பயிற்சி மையத்தில், 60 வகையான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கி வருகிறோம். தற்போது, 1,051வது பேட்ஜ் பயிற்சி நடந்து வருகிறது. முற்றிலும் இலவசம். இதுவரை, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.வங்கிகள், மாவட்ட தொழில் மையங்களில் வழங்கப்படும் தொழில் முனைவோர் கடன் வகைகள், மானியம் உட்பட விஷயங்களை தெரிந்து கொண்டு, முறையான பயிற்சி பெற்றால், நிச்சயமாக சாதிக்கலாம். பயிற்சி பெற்றவர்கள் பலர், வீட்டில் இருந்தபடியே, பணம் ஈட்டி வருகின்றனர். அதற்கு, மக்களின் தேவைகளை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.களம் காத்திருக்கிறது... நீங்கள் நினைத்தால் ஆளலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை