உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உள்வாங்குது சாலை... எப்போ வரும் நல்ல வேளை? கலெக்டர் நடவடிக்கைக்கு காத்திருப்பு

உள்வாங்குது சாலை... எப்போ வரும் நல்ல வேளை? கலெக்டர் நடவடிக்கைக்கு காத்திருப்பு

கோவை: அஜ்ஜனூர் பேரூர் ரோட்டில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால், ரோடு பெரும் குழியாக உள்வாங்கியுள்ளது.மாநகராட்சி 24 மணி நேர குடிநீர் திட்டத்துக்காக, அஜ்ஜனூர் சாலை வழியாக குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.இந்த குழிகள் சரியாக மூடப்படவே இல்லை. வேடப்பட்டி -பேரூர் ரோட்டில் புதுக்குளம், பேரூர் குளக்கரையில் ரோடு பெயரளவுக்கு போடப்பட்டது.இதில் கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று, பல கி.மீ., தூரத்துக்கு ரோட்டின் பெரும்பகுதி குழியாக காணப்படுகிறது. இதில், வேடப்பட்டி அருகே உள்ள ரோடு, நமது நாளிதழில் வெளியான செய்தியால் சரி செய்யப்பட்டுள்ளது.அஜ்ஜனூரில் சுமார் 15 அடி நீளத்துக்கு நடுரோட்டில், பல இடங்களில் பெரும் குழி உருவாகியுள்ளது. தற்காலிகமாக கற்களைக் கொட்டி இருந்தாலும், அதையும் தாண்டி மேலும் சாலை உள்வாங்கியுள்ளது.அந்த வழியாக, பள்ளிகளுக்கு குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் பெற்றோர் அடிக்கடி தடுமாறி விழுகின்றனர். பெரும் விபத்து நடப்பதற்குள் சரி செய்ய வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.'புதிதாக ரோடு போட்டு ஓராண்டுதான் ஆகியுள்ளது. ரோடு போட்டதுமே குழி விழுந்து விட்டது. ஆனால், அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவுமில்லை; சரி செய்யவுமில்லை. தரமில்லாத ரோட்டுக்கு ஒப்புதல் கொடுத்த அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி