உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு குடிநீர் குழாயை சரி செய்த மாநகராட்சி

நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு குடிநீர் குழாயை சரி செய்த மாநகராட்சி

பெ.நா.பாளையம்:துடியலூர் ஜி.என்.மில்ஸ் பிரிவு அருகே நீண்ட காலமாக இருந்து வந்த அத்திக்கடவு குடிநீர் குழாய் பழுதை மாநகராட்சி நிர்வாகம் சரிப்படுத்தியது.கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஜி.என். மில்ஸ் பிரிவிலிருந்து சுப்ரமணியம்பாளையம் செல்லும் வழியில், அத்திக்கடவு குடிநீர் குழாய் உடைந்து, கடந்த எட்டு மாதங்களாக சாக்கடையில் வீணாக கலந்து வந்தது.இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள பாரதி நகர், எஸ்.எஸ்.கார்டன், சூரிய லட்சுமி கார்டன், மெயின் ரோட்டில் வசிக்கும் பொது மக்களுக்கு, 20 நாட்களுக்கு ஒரு முறை, ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருவதாகவும், குடிக்க போதுமான தண்ணீர் இல்லாத நிலையில், கடந்த எட்டு மாதங்களாக அத்திக்கடவு குடிநீர் குழாய் உடைந்து, சாக்கடையில் கலந்து வந்தது. குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக செப்பனிட மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் கொடுத்தோம். கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினரும் இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய் உடைப்பை சரிப்படுத்தியது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ