உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் வரத்தும் குறைவு; விலையும் சரிவால் ஏமாற்றம்

வாழைத்தார் வரத்தும் குறைவு; விலையும் சரிவால் ஏமாற்றம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மார்க்கெட்டிற்கு, சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் வாழைத்தாரை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வியாபாரிகள் வருகை அதிகமுள்ள நிலையில், ஏலம் முறையில் வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டுகிறது.தற்போது வாழைத்தார் வரத்து குறைந்து, விலையில் மாற்றம் ஏற்பட்டு சரிந்து வருவதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர், என, வியாபாரிகள் தெரிவித்தனர்.இந்த வாரம், செவ்வாழை கிலோ, 65 - 70 ரூபாய்; பூவன் --- 29, நேந்திரன் - 32, கதளி - 35, சாம்பிராணி வகை - 30, ரஸ்தாளி - 35 ரூபாய்க்கு விற்பனை ஆனது.கடந்த வார விலையை விட, நேந்திரன் கிலோ - 13, ரஸ்தாளி - 5, பூவன் - 1, சாம்பிராணி வகை - 10, கதளி - 15 ரூபாய் விலை சரிந்துள்ளது. செவ்வாழை மட்டும் 5 முதல் 10 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை