உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார்சலில் அனுப்பிய டயர் மாயம்; இழப்பீடு தர ஆணையம் உத்தரவு

பார்சலில் அனுப்பிய டயர் மாயம்; இழப்பீடு தர ஆணையம் உத்தரவு

கோவை, : பார்சலில் அனுப்பிய டயர் காணாமல் போனதால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, உக்கடம், ஜி.எம்.நகரில், ரத்னாகிரீஸ்வரன் என்பவர் மாருதி மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். கோவை- மைசூருக்கு, சித்தாபுதுாரிலுள்ள மேட்டூர் டிரான்ஸ்போர்ட் பார்சல் சர்வீஸ் வாயிலாக, 2022, மார்ச் 5ல், 55,000 ரூபாய் மதிப்புள்ள டயர்களை அனுப்பினார். பார்சல் கட்டணமாக, 800 ரூபாய் செலுத்தினார். ஆனால், குறிப்பிடப்பட்ட முகவரிக்கு பார்சல் சென்றடையவில்லை. பார்சல் சர்வீஸ் நிறுவனத்திடம் கேட்டபோது, முறையான பதில் கிடைக்கவில்லை.இழப்பீடு கேட்டு, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், 'பார்சல் சர்வீஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு சரக்கின் மதிப்பு 55,000 ரூபாய் திருப்பி செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி