உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டின் கதவை உடைத்து ஆறு பவுன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து ஆறு பவுன் நகை திருட்டு

வடவள்ளி;கஸ்தூரிநாயக்கன்பாளையம், ஜி.சி.டி., நகரை சேர்ந்தவர் பிரேமலதா,48. சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்துவிட்டார். பிரேமலதா மட்டும் தனியாக வசித்து வந்தார். சுதந்திர தினத்தன்று, பிரேமலதா, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். மாலையில், வீட்டின் அருகில் உள்ள நித்திய கல்யாணி என்பவர் பிரேமலதாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வீட்டின் கதவு திறந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது , பீரோவில் இருந்த ஆறு பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகியிருந்தது. பிரேமலதா அளித்த புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை