கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். அவர்களை மீட்க, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ். டிரெண்ட்ஸ் டெய்லரிங்
மாணவிகளுக்கு தையல் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சுடிதார், பிளவுஸ், பட்டு பாவாடை தைக்க கற்றுத் தரப்படுகின்றன. முகவரி: என்.எஸ்.ஆர். சாலை, சாயிபாபா காலனி. தொடர்புக்கு: 89396 -68859. இலவச பயிற்சி
பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழ், கணித பாடங்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. முகவரி: வெள்ளக்கிணறு. தொடர்புக்கு: 99441 -79188. ஹிந்தி டியூசன்
ஸ்போக்கன் ஹிந்தி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு, ஹிந்தி பாட வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. முகவரி: புதிய பேருந்து நிலையம், சூலூர். தொடர்புக்கு: 98429 -65131. சி.எஸ்.எஸ். கணினி பயிற்சி மையம்
கோச்சிங் கிளாஸ், தமிழ், ஆங்கில வழி கணினி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: குனியமுத்தூர், மாச்சம்பாளையம். தொடர்புக்கு: 97912- 27227, 78711- 77035. மனவளக்கலை மன்ற அறக்கட்டளை
7 முதல் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, மனவளக் கலை யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. மே 1 முதல் 5ம் தேதி வரை காலை 10:00 முதல் 4:00 மணி வரை நடக்கிறது. கட்டணம் 2 ஆயிரம் ரூபாய். முகவரி: ராமநாதபுரம். தொடர்புக்கு: 97873 -30898, 94431- 92247. அறிவு திருக்கோயில்
14 வயதிற்கு மேல் மற்றும் பெரியவர்களுக்கான ஆளுமைப்பேறு யோகா திறனூக்க பயிற்சி, வரும் 29 முதல் மே 3ம் தேதி வரை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. கட்டணம்: 800 ரூபாய். முகவரி: பி.என்.புதூர். தொடர்புக்கு: 98427- 52564. கிட்ஸ் சம்மர்
அபாகஸ், மிட்பிரெயின் ஆக்டிவேஷன், ரூபிக்ஸ் கியூப், ஆர்ட் அண்ட் கிராப்ட், செஸ், யோகா, ஹேண்ட் ரைட்டிங், டிராயிங், பெயின்டிங், டியூசன், பொனிக்ஸ், ஸ்பெல் பீ, ஸ்போக்கன் இங்கிலீஷ் அண்ட் ஹிந்தி ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. முகவரி: அல்வேர்னியா பள்ளி எதிரில், ராமநாதபுரம். தொடர்புக்கு: 99941- 65285.