கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். அவர்களை மீட்க, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ். டேட்சன்ஸ் இசைப் பள்ளி
கீபோர்டு, கிட்டார், வயலின், புல்லாங்குழல், டிரம்ஸ் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. முகவரி: ஹிந்துஸ்தான் கல்லுாரி. தொடர்புக்கு: 80126 47090, 93636 17090. ஹிந்துஸ்தான் ஸ்போர்ட்ஸ் அகாடமி
6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மே 1 முதல் 31ம் தேதி வரை காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை இறகுப்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாலை 6:30 முதல் 8:00 மணி வரை இறகுப்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. முகவரி: அவிநாசி சாலை, நவஇந்தியா பின்புறம். தொடர்புக்கு: 90874 43331. சிலம்பாலயா விளையாட்டு மற்றும் பொதுநல அறக்கட்டளை
மே 5 முதல் 26 வரை இலவச சிலம்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முகவரி: இருகூர். தொடர்புக்கு 94431 18510, 93630 12248. தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு விளையாட்டுக் கழகம்
கோ-கோ பயிற்சி மே 2 முதல் 30 வரையும், கையுந்துப் பந்து பயிற்சி மே 2 முதல் 18 வரை அளிக்கப்படுகிறது. முகவரி: வரதராஜபுரம். தொடர்புக்கு: 95977 33403, 94864 42918. டிவைன் ஸ்போர்ட்ஸ் அகாடமி
கிரிக்கெட், கூடை பந்து, சிலம்பம், ஸ்கேட்டிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 2,000 ரூபாய் பயிற்சிக் கட்டணம். முகவரி: ஜே.வி.வி.ஓ.ஏ. காம்ப்ளக்ஸ், அத்திப்பாளையம் பிரிவு, கணபதி. தொடர்புக்கு: 96008 88445, 98422 33722. கால்பந்து இலவச பயிற்சி முகாம்
12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மே 3 முதல் 17 வரை கால்பந்து பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. முகவரி: அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், மருதமலை பிரதான சாலை. தொடர்புக்கு: 94422 66815, 74186 13458.