உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தோப்பில் பாசி நுாற்றாண்டு விழா பாலக்காட்டில் 28ல் நடக்கிறது

தோப்பில் பாசி நுாற்றாண்டு விழா பாலக்காட்டில் 28ல் நடக்கிறது

பாலக்காடு;தோப்பில் பாசி நுாற்றாண்டு விழா, வரும் 28ம் தேதி பாலக்காட்டில் நடைபெறுகிறது.மலையாள நாடக அரங்கிற்கும், திரைப்பட துறைக்கும், அரசியல் மற்றும் சமூகத்திற்கும் மறக்க முடியாத பங்களிப்பை வழங்கியவர் தோப்பில் பாசி. மறைந்த அவரது பிறந்த நுாற்றாண்டு விழா வரும் 28ம் தேதி பாலக்காட்டில் கொண்டாடப்படுகிறது.கேரளா சங்கீத நாடக அகாடமி, ஸ்வரலயா, பாலக்காடு மாவட்டம் பொது நூலகம், முற்போக்கு கலை சாகித்திய சங்கம், யுவ கலை இலக்கிய குழு ஆகியவை ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.பாலக்காடு செம்பை நினைவு அரசு சங்கீத கல்லுாரில், அன்று காலை, 10:00 மணிக்கு முன்னாள் கலாசார துறை அமைச்சர் பேபி விழாவை துவக்கி வைக்கிறார். ஸ்வரலயா தலைவர் கிருஷ்ணதாஸ் தலைமை வகிக்கிறார்.தொடர்ந்து 'தோப்பில் பாசியும் நாடகமும்', 'தோப்பில் பாசி என்ற திரைப்பட தயாரிப்பாளர்' ஆகிய இரு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெறும். மாலை, 5:00 மணிக்கு விழா நிறைவு பெறும்.நிறைவு விழாவை, முன்னாள் வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வம் துவக்கி வைப்பார். சிறப்பு விருந்தினராக ஊராட்சி -கலால் துறை அமைச்சர் ராஜேஷ் பங்கேற்கின்றார்.தொடர்ந்து பாலக்காடு நாடக கலைஞர்களின் 'கனல் வழிகளிலுாடை' என்ற தலைப்பில் தோப்பில் பாசியின் சிறந்த நாடகங்களில் உள்ள முக்கிய பகுதிகளை கொண்ட நாடகம் அரங்கேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை