| ADDED : ஜூலை 02, 2024 02:33 AM
அன்னுார்;குடிபோதையில் இரண்டு போலீசாரை தாக்கிய, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வருகிற தலைமை காவலர் கார்த்திகேயன் மற்றும் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது பசூர் பெட்ரோல் பங்க் அருகில் பொது இடத்தில் அமர்ந்து மூவர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.அழகுராஜா மூவரையும் கண்டித்துள்ளார். அப்போது மூவரும் சேர்ந்து குடிபோதையில் அழகுராஜா மற்றும் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளனர். இதையடுத்து காவலர் அழகுராஜா புகாரின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருத்திக்ராஜ், 23. திருப்பூர் மாவட்டம், சேவூரை சேர்ந்த ஈஸ்வரன், 30. கேரள மாநிலம், முத்துலமாடாவைச் சேர்ந்த பிரதீஷ், 37, என்பது தெரிய வந்தது. மூவரும் அன்னுார் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.