கத்தியை காட்டி பணம் பறிப்புமூவர் சிறையிலடைப்பு
கோவை : கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறிப்பில் ஈடுபட்ட மூவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை, ரத்தினபுரியை சேர்ந்தவர் பாரதிராஜா, 22. நேற்று முன்தினம் டாடாபாத் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை இருவர் வழிமறித்தனர். கத்தியை காட்டி, மிரட்டி பணம் ரூ.750 ஐ பறித்துக் கொண்டனர். இதுகுறித்து பாரதிராஜா ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் பாரதிராஜாவிடம் பணம் பறித்தது குப்பகோணம்புதூரைச் சேர்ந்த பூபதி, 26, சாமிநாதா கவுண்டர் தெருவை சேர்ந்த விஷ்ணு, 29 எனத் தெரிந்தது. அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து கத்தி மற்றும் ரூ.220 பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், செல்வபுரம், ஸ்ரீ ஜிவி நகர், எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த ராஜசேகர், 44 என்ற ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற சொக்கம்புதூரை சேர்ந்த வினோத், 18 என்பவரை செல்வபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.