உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனமரபியல் நிறுவனத்தில் இன்று தேசிய கருத்தரங்கு

வனமரபியல் நிறுவனத்தில் இன்று தேசிய கருத்தரங்கு

கோவை:மரங்கள் மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு, கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், இன்றும், நாளையும் நடக்கிறது.இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்கழகம் சார்பில், கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், இன்று, மரங்கள் மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு துவங்குகிறது. இதில், சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்கிறார். கருத்தரங்கு நாளையும் நடக்கிறது.இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கழக நிர்வாக இயக்குனர் காஞ்சன் தேவி, கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் குஞ்சிகண்ணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை