உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று 8 மாவட்டங்களில் கன மழை உண்டு

இன்று 8 மாவட்டங்களில் கன மழை உண்டு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாநிலத்தில் அதிகபட்சமாக, நேற்று சின்னக்கல்லாரில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. 40க்கும் மேற்பட்ட இடங்களில், 1 முதல், 7 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், நாளை கனமழை பெய்யும். மற்ற இடங்களில் இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாகும். சென்னையில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, தொண்டியில், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. சென்னை, ஈரோடு, கரூர் பரமத்தி, நாகை ஆகிய இடங்களில், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. மற்ற இடங்களில், 36 டிகிரி செல்ஷியசுக்கு குறைவான வெப்ப நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை