உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று விநாயகர் சிலை விசர்ஜனம் மாநகரில் போக்குவரத்து மாற்றம்

இன்று விநாயகர் சிலை விசர்ஜனம் மாநகரில் போக்குவரத்து மாற்றம்

கோவை:மாநகரில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, முத்தண்ணன் குளத்தில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மாநகர போலீஸ் சார் பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு, காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.n உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து, பேரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம் சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.n காந்திபுரம், டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, சலிவன் வீதியில் செல்லும் வாகனங்கள் உக்கடம் சென்று வலதுபுறம் திரும்பி, பேரூர் பைபாஸ் ரோடு சிவாலயா தியேட்டர் சந்திப்பு, செல்வபுரம் வழியாக செல்ல வேண்டும்.n உக்கடம் வழியாக திருச்சி ரோடு, மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும், சுங்கம் பைபாஸ் வழியாக, திருச்சி சாலையில் செல்ல வேண்டும்; உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும், ஒப்பணக்கார வீதி ராஜ வீதி, ரயில் நிலையம் வழியாக, காந்திபுரம் செல்ல வேண்டும்.n தடாகம் ரோட்டில் இருந்து, நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், வெங்கிட்டாபுரம் சந்திப்பில் இடது புறம் திரும்பி, என்.எஸ்.ஆர்., ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோடு, ஏ.ஆர்.சி., சந்திப்பு சென்று, சிவானந்தா காலனி வழியாக செல்ல வேண்டும்; மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனுார் பாலம் சந்திப்பில் இடது புறம் திரும்பி கணபதி, காந்திபுரம் வழியாக செல்ல வேண்டும்.n மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள், விநாயகர் சிலை ஊர்வலம் வடகோவை மேம்பாலத்தை கடந்த பிறகு, வடகோவை மேம்பாலம் வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும்.n பேரூரில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பேரூர் ரோடு, செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி அருகில் வலது பக்கம் திரும்பி, பேரூர் புறவழி சாலை வழியாக உக்கடம் செல்ல வேண்டும்; பேரூர் சாலையிலிருந்து தடாகம் ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள் சிவாலயா சந்திப்பு, சீரநாயக்கன்பாளையம் வழியாக, மருதமலை சாலையை அடைந்து லாலி ரோட்டில் இடதுபுறமாக திரும்பி, தடாகம் சாலையில் செல்லலாம்.இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி