உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

திருத்தேர்த் திருவிழா

பெரியகடை வீதி, கோனியம்மன் கோவிலில், திருத்தேர்த் திருவிழா கடந்த பிப்., 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வருகிறது. காலை, அபிஷேகம், ஆராதனைகளை தொடர்ந்து, இன்று மாலை, 6:00 மணி முதல், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

நாமசங்கீர்த்தனம்

ராம்நகர், கோதண்டராமர் கோவிலில், விசேஷ பூஜைகள், ஹோமங்கள், சொற்பொழிவு மற்றும் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள் கடந்த ஜன.,31ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.

அபிஷேக விழா

கோவை நகரத்தார் இளைஞர் சங்கம் சார்பில், 641வது மாதாந்திர அபிஷேக விழா நடக்கிறது. பேரூர், பட்டீஸ்வரசுவாமி கோவில், பாலதண்டாயுதபாணி சன்னதியில் காலை, 9:30 மணிக்கு விழா நடக்கிறது.

பகவத்கீதை சொற்பொழிவு

உங்கள் எண்ணங்களால் ஒன்றை உருவாக்கவும், அழிக்கவும் முடியும் என போதிக்கும் பகவத்கீதை மனமே வலிமையானது என்கிறது. டாடாபத், ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷனில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.

நுால் வெளியீட்டு விழா

லீடர்ஸ் டெஸ்க் மற்றும் ஓவியா பதிப்பகம் இணைந்து நுால்கள் வெளியீட்டு விழாவை நடத்துகின்றன. 'ஒரு மகரந்த நதி', 'கவிதைச் சிறகுகள்', 'என்னோடு பேச கனவில் வராதே' ஆகிய நுால்கள் வெளியிடப்படுகின்றன. காந்திபுரம், லீடர்ஸ் டெஸ்க் நிறுவனத்தில், காலை, 10:00 மணிக்கு விழா நடக்கிறது.

அமைதியின் அனுபவம்

தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.

கைத்தறி கண்காட்சி, விற்பனை

ஆர்.எஸ்.புரம், ஆரோக்கியசாமி தெரு, சாஸ்திரி மைதானத்தில், 'காட்டன் பேப்' எனும் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் 120 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. காலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை பார்வையிடலாம்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி ரை நடக்கிறது. * குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ