உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி

வேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி

கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, நாளையுடன் நிறைவு பெறுகிறது.வேளாண் பல்கலையின் கீழ், 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 5,361 இடங்கள், மீன்வள பல்கலைக்கு 371 இடங்கள், அண்ணாமலைபல்கலை வேளாண் படிப்புகளில், 340 இடங்களுக்கு முதலாமாண்டு சேர்க்கை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.கடந்த, மே 7ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நாளையுடன் இதற்கான காலஅவகாசம் நிறைவு பெறுகிறது. நேற்று வரை 30,000க்கும் குறைவான விண்ணப்பங்களே பதிவு செய்யப்பட்டுள்ளது.வேளாண் பல்கலையில் தற்போது விண்ணப்பித்துள்ள மாணவர்களில் பலர் மருத்துவம், பொறியியல், போன்ற படிப்புகளுக்கு செல்வார்கள் என்பதால், நடப்பாண்டில் வேளாண் பல்கலை சேர்க்கையில், பெரியளவில் போட்டி இருக்காது.பல்கலை மாணவர் சேர்க்கை டீன் வெங்கடேச பழனிசாமியிடம் கேட்டபோது, ''விண்ணப்ப பதிவு குறித்து, நாளை (இன்று) தெளிவாக தெரிவிக்கிறோம். நாளை மறுநாள் (நாளை) விண்ணப்ப பதிவு நிறைவு பெறுவதால், ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ